Government Emblem
புதுச்சேரி அரசு

புதுச்சேரி மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம்

Puducherry Government Emblem
EMERGENCY ALERT
State Helpline: 112 District Helpline: 1070 State Control Room: 0413 220000 District Control: 0413 220000 Medical Emergency: 0413 220000 Fire Rescue: 0413 220000

மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம்

எந்தவொரு பாதிக்கப்பட்ட பகுதியிலும் அந்த பகுதியின் சமூகத்தின் சமாளிக்கும் திறனுக்கு அப்பாற்பட்ட இயல்பில் அல்லது அளவில், இயற்கை அல்லது மனிதனால் ஏற்படுத்தப்படும் கணிசமான உயிர் இழப்பு அல்லது இன்னல் மற்றும் சொத்துக்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு சேதம் அல்லது சீரழிவு ஏற்படுத்தும் ஒரு அழிவு, விபத்து அல்லது கடுமையான நிகழ்வு "பேரழிவு" எனப்படும்.

பேரழிவுகளைத் தடுப்பதற்கும், தணிப்பதற்கும், நடவடிக்கை எடுப்பதற்கும் அல்லது நிர்வகிப்பதற்கும், ஒரு மக்கள் நல அரசுக்கு பேரழிவு மேலாண்மை அவசியம், இது பின்வரும் அம்சங்களுக்குத் தேவையான அல்லது விரைவான நடவடிக்கைகளைத் திட்டமிடுதல், ஒழுங்கமைத்தல், ஒருங்கிணைத்தல் மற்றும் செயல்படுத்துதல் ஆகியவற்றின் தொடர்ச்சியான மற்றும் ஒருங்கிணைந்த செயல்முறையாகும்:

  • ஆபத்து அல்லது எந்த ஒரு பேரழிவின் அச்சுறுத்தலையும் தடுப்பது.
  • எந்தவொரு பேரழிவு அபாயத்தின் தீவிரத்தை அல்லது விளைவுகளை தணிப்பது அல்லது மட்டுப்படுத்துவது;
  • திறன் மேம்பாட்டுப் பயிற்சி
  • எந்தவொரு பேரழிவையும் சமாளிக்க தயார்நிலையில் இருத்தல்.
  • எந்தவொரு அச்சுறுத்தும் பேரழிவு நிலைமை அல்லது பேரழிவுக்கும் உடனடி நடவடிக்கை.
  • எந்தவொரு பேரழிவின் விளைவுகளின் தீவிரம் அல்லது அளவை மதிப்பீடு செய்தல்
  • மக்கள் மற்றும் கால்நடைகளை வெளியேற்றுதல், மீட்பு மற்றும் நிவாரணம்;
  • மறுவாழ்வு மற்றும் புனரமைப்பு.

பேரழிவுகளை திறம்பட நிர்வகிப்பதற்கான ஒரு நடவடிக்கையாகவும், அதனுடன் தொடர்புடைய அல்லது அதனால் ஏற்படும் விஷயங்களுக்காகவும், பேரழிவு மேலாண்மை சட்டம், 2005 இயற்றப்பட்டது.

அந்தச் சட்டத்தின் விதிகளின்படி, புதுச்சேரியின் யூனியன் பிரதேசத்தில் “புதுச்சேரி யூனியன் பிரதேச பேரிடர் மேலாண்மை ஆணையம்” என்ற ஒரு அமைப்பு மாண்புமிகு முதலமைச்சரின் தலைமையில் 01.08.2007 மற்றும் 19.06.2008 தேதியிட்ட அறிவிப்புகள் வாயிலாக அமைக்கப்பட்து.  இந்த ஆணையத்தின் தலைவரால் எட்டு நபர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப் பட்டுள்ளார்கள். இதில் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டமன்றத்தின் நான்கு உறுப்பினர்கள், தலா புதுச்சேரி, காரைக்கால், மஹே மற்றும் யானம் ஆகிய பகுதிகளை பிரதிநிதித்துவப் படுத்துகின்றனர், விஞ்ஞானிகள், பொறியாளர்கள், மூத்த அரசு ஊழியர்கள் / சமூக பணியாளர்கள் / தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் போன்ற துறை வல்லுநர்கள் மீதமுள்ள நான்கு உறுப்பினர்களாக நியமிக்கப் பட்டுள்ளார்கள்.

இந்த வலைத்தளம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் அதன் செயல்பாடுகள் மற்றும் இது தொடர்புடைய பொருட்கள் பற்றிய அனைத்து முக்கிய தகவல்களையும் குடிமக்களுக்கு வழங்குகிறது.